
தமிழ் சினிமாவில் ‘ஆம்பள’, ‘தனி ஒருவன்’ படங்கள் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. பின்னர் ‘மீசையை முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார். பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ படங்கள் மூலம் பிரபலமான இவர், அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.
'சிவக்குமாரின் சபதம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தை விரைவில் முடித்து மார்ச் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் ‘அன்பறிவு’ படத்தில் ஆதி நடிக்கவுள்ளார். இப்படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)